கதிகலங்கும் பிரான்ஸ்:மீண்டும் வெடித்த மஞ்சள் அங்கி போராட்டம்

Print lankayarl.com in பிரான்ஸ்

சுற்றுச்சூழலை காரணம் காட்டி பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியதால் கார் டிரைவர்கள் பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

அப் போராட்டம் அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக திரும்பியதால் பெருந்திரளான மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று தலைநகர் பாரீசை ஸ்தம்பிக்க வைத்தது.

கார் டிரைவர்கள் அணியும் மஞ்சள் நிற அங்கிகளை அணிந்து கொண்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் இது மஞ்சள் புரட்சி என்றும், மஞ்சள் அங்கி போராட்டம் என்றும் அழைக்கப்பட்டது.

அதே சமயம் இந்த போராட்டத்தில் பல முறை வன்முறையும் வெடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மக்களின் இந்த ஓயாத போராட்டம் அதிபர் மெக்ரானின் அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதையடுத்து போராட்டத்துக்கு அரசு பணிந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தொடர்ந்து 5 வாரங்களாக நடந்து வந்த மஞ்சள் அங்கி போராட்டத்தின் தீவிரம் சற்று குறைந்தது.

எனினும் அதிபர் மெக்ரான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் தொடர்ந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது